சுனாமியில் உயிர்நீத்தவர்களுக்கு இன்று நாடு முழுவதிலும் அஞ்சலி! - Yarl Thinakkural

சுனாமியில் உயிர்நீத்தவர்களுக்கு இன்று நாடு முழுவதிலும் அஞ்சலி!

ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சிக்குண்டு உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் முகமாக, உயிரிழந்தவர்களுக்காக பொதுமக்கள் அனைவரும் இன்று இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

இன்று காலை 09.25 தொடக்கம் 09.27 வரை, இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தும்படி கோரப்பட்டுள்ளது. அதேவேளை, உயிர்நீத்தோரை நினைவுகூர்ந்து நாடு முழுவதிலும் இன்று அஞ்சலி நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

Previous Post Next Post