எரிபொருட்கள் விலை அதிரடியாகக் குறைப்பு! - Yarl Thinakkural

எரிபொருட்கள் விலை அதிரடியாகக் குறைப்பு!

எரிபொருட்களின் விலை இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்குவரும் வகையில் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 92 மற்றும் 96 ஒக்டேன் ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவாலும், ஒட்டோடீசல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபாவாலும், சுப்பர் டீஸலின் விலை 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.

நல்லாட்சியின்கீழ் வகுக்கப்பட்ட எரிபொருள்விலை சூத்திரத்துக்கமையவே விலை குறைப்பு இடம்பெற்றது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு முடிவடைந்தபின்னர் 2019ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்காலக் கணக்கறிக்கை, நிதி அமைச்சரால் சபையில் சமர்பபிக்கப்பட்டது.

இதையடுத்து கருத்து வெளியிடுகையிலேயே விலைகுறைப்பு அறிவிப்பை சபாநாயகர் விடுத்தார்.
Previous Post Next Post