நயன்தாரவுக்கு கிடைத்த பெருமை! - Yarl Thinakkural

நயன்தாரவுக்கு கிடைத்த பெருமை!

செல்வாக்குமிக்க இளம் இந்தியர்கள் பட்டியலில் நடிகைகள் நயன்தாரா, பார்வதி மற்றும் பா.இரஞ்சித் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

ஜிக்யூ இதழ் ஒவ்வோர் ஆண்டும் செல்வாக்குமிக்க இளம் இந்தியர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் சினிமா, தொழில், விளையாட்டு மற்றும் பிற துறைகளில் சாதனை படைத்த 40 வயதுக்கு உட்பட்டவர்களின் பட்டியல் வெளியாகும்.
2018 ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில் நடிகைகள் நயன்தாரா, பார்வதி மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.

தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்க இடத்தை மாற்றி பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து வெற்றிப் படங்களில் நடித்ததற்காக நயன்தாரா இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

டாப்ஸி பன்னு, ஆலியா பட் மற்றும் ஆயுஷ்மான் குரானா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
Previous Post Next Post