ரஜினிக்கு ஜோடியாகும் கீர்த்தி - Yarl Thinakkural

ரஜினிக்கு ஜோடியாகும் கீர்த்தி

முருகதாஸ் இயக்கும் ரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேட்ட படத்திற்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

ரஜினியின் 2.0 படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பேட்ட படம் ரிலீசுக்கு முன்னமே 125 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,2.0 படத்தை தொடர்ந்து மீண்டும் லைகா நிறுவனம் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தையும் தயாரிக்கஉள்ளதாகசெய்திகள் கசிந்துள்ளது. ஆனால், இவற்றை எல்லாம் இன்னும் லைகா தரப்போ, ஏ.ஆர். முருகதாஸ் தரப்போ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை

இந்த படத்திற்கு நாற்காலி என்ற தலைப்புவைக்கப்பட்டுள்ளது கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில், ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் கீர்த்தி சுரேஷின் கதாபத்திரம் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை .
Previous Post Next Post