யாழ்.மாணவியை  முல்லைத்தீவு கடத்திச் சென்று வல்வுறவு -காயங்களுடன் சிறுமி மீட்பு: - Yarl Thinakkural

யாழ்.மாணவியை  முல்லைத்தீவு கடத்திச் சென்று வல்வுறவு -காயங்களுடன் சிறுமி மீட்பு:

பாடசாலை சென்ற 15 வயதான யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலை மாணவி ஒருவரைக் வழியில் வைத்து கடத்தி முல்லைத்தீவுக்குக் கொண்டுசென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்த இளைஞனை முல்லைத்தீவில் வைத்துக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று ஓட்டோ ஒன்றில் மாணவியை முல்லைத்தீவுக்கு கடத்திச் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமறைவாகியுள்ள ஏனைய இருவரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

இதேவேளை, கைதான இளைஞன் மல்லாகம் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை காலை மாணவி கடத்தப்பட்டுள்ளார். அவரை இரு நாட்களாக உறவினர்கள் தேடிவந்தனர். இந்நிலையில் முல்லைத்தீவி;ல் பாழடைந்த வீடொன்றில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் சிறுமியைக் கண்டுபிடித்து அவர்கள் மீட்டுள்ளனர். 

சிறுமியின் உடலில் துன்புறுத்தப்பட்டமைக்கான காயங்கள் காணப்பட்டதாகவும் தெரியவருகிறது. மீட்கப்பட்ட சிறுமி சிகிக்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மாணவியும் நானும் முகநூல் ஊடாக கதலி;த்தோம். இந்நிலையில் மாணவியை முல்லைத்தீவுக்கு கொண்டு சென்று அங்கு வாழ முடிவு செய்தோம் கைதான இளைஞன் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post