புத்தக கடையில் தீ! - Yarl Thinakkural

புத்தக கடையில் தீ!

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் புத்தக கடையொன்று திடிரென தீப் பிடித்ததால் அங்கிருந்த பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து  நாசமாகியுள்ளது.

இச் சம்பவம் அச்சுவேலி நகரிலுள்ள புத்தகக் கடையொன்றில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது:-

நகலிலுள்ள இந்தப் புத்தகக் கடையை நேற்று மாலை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில் இன்று அதிகாலை இப் புத்தகக் கடை எரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளனர்.

ஆனாலும் அங்கிருந்த பொருட்களும்  அந்தக் கடையும் முற்றுமுழுதாக எரிந்துள்ளது. இதில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள்  நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் எவையும் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பnhலிஸார் மேற்கொண்டு கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post