ரகுல் ப்ரீத் சிங்கின் புதிய தொழில்! - Yarl Thinakkural

ரகுல் ப்ரீத் சிங்கின் புதிய தொழில்!

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். சூர்யாவுடன் என்.ஜி.கே, கார்த்தியுடன் தேவ் படங்களில் நடிக்கிறார். தெலுங்கிலும் அதிக படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி வருமாறு:-

சினிமாவுக்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த விஷயம் உணவு. உடம்பை கட்டுகோப்பாக வைத்துக் கொள்வது என்பது வாயை கட்டிக்கொண்டு வாழ்வது அல்ல. விரும்பியதை சாப்பிட்டும் கட்டுகோப்பாக இருக்கலாம். அதற்கு நானே உதாரணம். உடற்பயிற்சி கூடம் வைத்துள்ள எனக்கு உணவு மீதும் ஆர்வம் அதிகம். ஒரு ஓட்டலை விடமாட்டேன்.

எல்லா ஊர் உணவுகளின் ருசியும் தெரியும். எந்த ஊருக்கு போனாலும் அங்கு ஸ்பெஷல் உணவு என்று யாராவது சொன்னால் அதை ருசித்து பார்க்காமல் விடவே மாட்டேன். ஜிம் ஆரம்பித்த எனக்கு உணவு மீதுள்ள பிரியத்தால் ஒரு ஓட்டல் ஆரம்பிக்கவும் எண்ணம் இருக்கிறது.

எனக்கு பிடித்த எல்லா உணவுகளையும் தயாரித்து அந்த ஒரே ரெஸ்டாரண்டில் கிடைக்கிற மாதிரி செய்ய ஆசை இருக்கிறது. 4 ஆண்டுகளில் 16 படங்களில் நடித்து விட்டேன். உற்சாகமாக இருக்கிறேன். ஓய்வு எனக்கு பிடிக்காத விஷயம். கொடுத்த வேலையை முடிப்பேன். பலனை பற்றி யோசிக்க மாட்டேன். இவைதான் என்னை மகிழ்ச்சியாக வைத்துள்ளது.
Previous Post Next Post