கிளியில்  கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!  - Yarl Thinakkural

கிளியில்  கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை! 

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்ப்பட்ட புளியம்பொக்கனைக் காட்டுப் பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் கிளிநொச்சி பொலிஸ் விசேட குழுவினரால் முற்றுகை இடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் விசேட குழுப் பொறுப்பதிகாரி டி.எம் சத்துரங்க தலைமையிலான குழுவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையிலையே இவ் முற்றுகை இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரண்டு சந்தேகக நபர்கள் தப்பி ஓடியுள்ளனர் குறித்த பகுதியில் இருந்து பதின் மூன்று பேரல் கோடா மற்றும் மூன்று கான்களில் கசிப்பு மற்றும் கசிப்பு வடிப்பதர்கான பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவரின் துவிச்சக்கர வண்டியும் பொலிசாரால் மீட்க்கப்பட்டுள்ளது.
தப்பிச் சென்ற இரு சந்தேக நபர்களையும் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதுடன் குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஓர் கசிப்பு மொத்த விற்பனையாளரினது எனவும் சந்தேக நபர்களைக் கைது செய்ததன் பின்னர் பிரதான குற்றவாளியையும் கைதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மேலும்  மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களை  நாளை கிளிநொச்சி நீதவான்  நீதிமன்றில் பாரப்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post