மஹிந்தவின் மகன் யோஷித படுகாயங்களுடன் வைத்தியசாலையில்! - Yarl Thinakkural

மஹிந்தவின் மகன் யோஷித படுகாயங்களுடன் வைத்தியசாலையில்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ ரகர் விளையாட்டின்போது படுகாயமடைந்துள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளையாட்டின்போது இடம்பெற்ற விபத்தில் யோஷிதவின் முகம் மற்றும் தலைப்பகுயில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய அவரது முகம் இரும்புத் தகடுகள் பயன்படுத்தி மீளவும் சரி செய்யப்பட்டுள்ளது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மீளவும் யோஷித ராஜபக்ஷ ரகர் விளையாட முடியாதென வைத்தியர்கள் ஆலோசனை வழங்கிய பின்னரே சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post