ஜனாதிபதியால் புதிய தூதுவர்களுக்கு நற்சான்று கையளிப்பு! - Yarl Thinakkural

ஜனாதிபதியால் புதிய தூதுவர்களுக்கு நற்சான்று கையளிப்பு!

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 தூதுவர்கள் மற்றும் ஒரு உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி மாளிகையில் வைத்து இன்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.

குரோஷியா, கானா, கொங்கோ மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு,

01-Mr. Petat Ljubicic – குரோஷியா குடியரசுக்கான தூதுவர்
02- Mr. Michael Nil Nortey Oquaye  – கானா குடியரசுக்கான உயர்ஸ்தானிகர்
03- Mr. Andre Poh – கொங்கோ குடியரசுக்கான தூதுவர்
04- Mrs. Rita Giuliana Mannella – இத்தாலி குடியரசுக்கான தூதுவர்
Previous Post Next Post