டிகிரி வாங்கிய நாய்! - Yarl Thinakkural

டிகிரி வாங்கிய நாய்!

நாய்கள் நன்றி உணர்வு அதிகம் உள்ளது. மனிதர்களுக்கு நாய் மிக உதவியாக இருக்கும். உதவி என்றால் சின்ன உதவி அல்ல பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாத்துவது, மக்கள் இருக்கும் இடத்தில் உள்ள வெடிகுண்டை யாரும் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று வெடிக்கச்செய்வது போன்ற உதவிகளை தான் செய்யும்.

இவை எல்லாம் சினிமாவில் தான். உண்மையாக நாய் வளர்ப்பவர்களுக்கு தான் அது செய்யும் சேட்டை தெரியும்.

இருந்தாலும் நாய்கள் நன்றி மிக்கது, அதே நேரத்தில் அதிக புத்திசாலிகள். மேலும் நாய்களால் பெரிய பெரிய அளவில் உதவிகள் செய்யமுடியாவிட்டாலும் சிறிய சிறிய உதவிகள் எல்லாம் செய்ய முடியும். அதற்காக நாய்களை நன்கு பழக்கினால் மனிதகளுக்கு அதிகமாக உதவிகளை செய்ய வைக்கலாம்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்தவர் பிரிட்னே ஹவுலே இவர் கரோலிக் வலி காரணமாக கால் சரியில்லாததால் வீல் சேரில் தான் எப்பொழுதும் அமர்ந்திருப்பார். இவரால் அன்றாட பணிகளை செய்யவே வேறு ஒருவரின் உதவியை நாட வேண்டியது இருக்கும். அப்படியே அவர்கள் செய்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் உதவி செய்பவர்களும் பொறுமை இழந்து விடுகின்றனர். அல்லது மனம் இல்லாமல் உதவி செய்கின்றனர்.

அதற்கான ஹவுலே ஒரு கோல்டன் ரெட்ரிவர் என்ற நாயை வளர்த்தார். அந்த நாய்க்கு கிராஃப்பி என் பெயரிட்டார். அவரே அந்த நாயை உதவிகளை செய்ய வைக்க பயிற்சி அளித்தார். அப்பொழுது அவர் நியூயார்க்கில் உள்ள போஸ்ட் டாம் என்ற பல்கலையில் பட்டம் படிக்க சென்றார்.

அவர் படிக்க சென்ற முதல் நாள் முதல் கிராஃப்பியுடன் அவருடன் தான் இருந்தது. ஹவுலேவால் நடக்கமுடியாததால், பேன் போடுவது லைட் போடுவது, ஏதேனும் ஒரு பொருளை எடுத்து தருவது, கதவுகளை திறந்து விடுவது போன்ற எல்லா உதவிகளைவும் கிராஃப்பி செய்து வந்தது. அவரது 4 ஆண்டு பட்டப்படிப்பில் முதல் நாள் முதல் கடைசி நாள் வரை அவருக்க தேவையான எல்லா உதவிகளையும் செய்தது.

இதை எல்லாம் அந்த பல்கலை நிர்வாகம் முதல் நாள் முதலே கவனித்து வந்துள்ளது. இந்நிலையில் ஹவுலே பட்டம் பெற்றார். அவர் அந்த பட்டத்தை பெற கிராஃப்பியும் ஒரு முக்கியமான காரணம் என கருதி அந்த பல்கலை கிராஃப்பிக்கும் கவுரவ டிப்ளமோ பட்டம் வழங்கியது. இந்த தகவல் தற்போது வைரலாக பரவி வருகிறது.
Previous Post Next Post