யாழ் கலட்டியில் ஆசிரியர் வீடின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!  - Yarl Thinakkural

யாழ் கலட்டியில் ஆசிரியர் வீடின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்! 

பொலிஸாரின் விசேட ரோந்து, வீதி சோதனைகளையும் தாண்டி வாள்வெட்டு குழுக்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. 

இதன்படி நேற்று இரவு 9 மணியளவில் யாழ்.கலட்டி பகுதியில் உள்ள வீடோன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதுடன், பொருட்களையு அடித்து நாசம் செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு குளுக்களை அடக்கிவதற்க்கு பொலிஸார் விசேட ரோந்து மற்றும் வீதி சேதணையில் ஈடிபட்டுவருகின்றனர். 

இருப்பினும் நாளுக்கு நாள் வாள் வெட்டு குளுக்களின் அட்டகாசம் தொடர்ந்து செல்கின்றது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் 2 மோட்டார் சைக்கிலில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியதுடன், வீட்டின் கதவினையும் அடித்து உடைத்துள்ளனர். இவர்களின் அட்டகாசத்தின் சத்தம் கேட்டு ஓடிவந்த அயல் வீட்டாரின் மீதும் அவர்கள் வாள்வெட்டு நடத்த முற்பட்டுள்ளனர். இருப்பினும் அவர் சுதாகரித்து கொண்டு திரும்பி வீட்டுக்குள் அடங்கி கொண்டதால் அவரின் வீட்டு கதவின் மீதி வாள் வெட்டு நடாத்தப்பட்டுள்ளது. 

ஓரிரு நிமிடங்கள் அங்கு நின்று அட்டகாசம் புரிந்த அவர்கள் அயலவர்கள் வருவதற்க்குள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளர். இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணையை போலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 
Previous Post Next Post