மனைவியின் கள்ளக் காதலனை தாக்கிய கணவர்! - Yarl Thinakkural

மனைவியின் கள்ளக் காதலனை தாக்கிய கணவர்!

தமிழகத்தில் மனைவி கள்ளத்தொடர்பு வைத்த நபரை கணவர் மற்றும் சிலர் இரும்பு தகடால் தாக்கியதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாம்பரம் மாடம்பாக்கம் ஏ.எஸ்.கே நகர் பகுதியை சேர்ந்தவர் பாசம் (27). இவருக்கு அப்பகுதியின் பேரூராட்சி டிரைவராக வேலை செய்து வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் தான் சுரேஸ்(38). இவருக்கு குளோரி(35) என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் குளோரிக்கும், சுரே{ற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

அப்போது குளோரிக்கு பாசத்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு ஆகியுள்ளது.

அதன் பின் சுரேஷ் மற்றும் குளோரி சமரசமாக பேசி வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் சுரேஷிற்கும், பாசத்திற்கும் முன்விரோதம் உருவாக ஆரம்பித்தது. இது போன்ற நிலையில் நேற்று காலை பாசம் வழக்கம்போல துப்புரவு பணிக்கு குப்பை அள்ளும் வாகனத்தை ஒட்டிக்கொண்டு மப்பேடு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த குளோரியிடம் பாசம் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் அவரது தந்தை தாஸ் மற்றும் சுரேஷின் தம்பி மகேஷ் ஆகிய 3 பேரும் குப்பை அள்ளும் இரும்பு தகடு மற்றும் கத்தியால் பாசத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதன் பின் இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் சுரேஷ், அவரது தந்தை தாஸ் (57), தம்பி மகேஷ் (28) ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Previous Post Next Post