பிரபாகரனை கொல்ல திட்டமிட்டேன்! -சரத் பொன்சேகா- - Yarl Thinakkural

பிரபாகரனை கொல்ல திட்டமிட்டேன்! -சரத் பொன்சேகா-

தம்மை விமர்சித்தமை மற்றும் கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மன்னிப்பு கோருமாறு ஜனாதிபதி கோரிய போதும் தான், அதற்கு உடன்படவில்லை என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அமைச்சுப்பதவி வேண்டுமென்றால் தம்மிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜனாதிபதி கோரியதாக சரத் பொன்சேகா, மாவனல்லையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.

எனினும் அமைச்சு பதவிக்காக தாம் மேற்கொள்ளாத ஜனாதிபதியை கொலை சதி குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் தாம் வேலுப்பிள்ளை பிரபாகரனை மாத்திரமே கொலை செய்ய திட்டமிட்டதாக சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
Previous Post Next Post