சபாநாயகருக்கு எதிராக விசாரணை! -மஹிந்த யாப்பா மிரட்டல்- - Yarl Thinakkural

சபாநாயகருக்கு எதிராக விசாரணை! -மஹிந்த யாப்பா மிரட்டல்-

நாட்டிர் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதரகங்களுக்கு சென்று மண்டியிட்டு ஆதரவுகோருகின்றனர்.  எந்தவொரு காட்டிக்கொடுப்பையும் செய்வதற்கு அவர்கள் தயாராகவே இருக்கின்றனர் என்று மஹிந்த ஆதரவு அணி எம்.பியான மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையே பொறுப்புகூறவேண்டும். ஆட்சிக்காக அனைத்துக் காட்டிக்கொடுப்புகளையும் அவரும் அவரது சகாக்களும் செய்துவருகின்றனர்.

உலக வரலாற்றிலேயே பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணாக, ஜனநாயகத்துக்கு எதிராக இலங்கையில் சபை அமர்வு நடத்தப்பட்டுவருகின்றது. மக்களின் பணம் வீண்விரயமாக்கப்படுகின்றது. எனவே, ஸ்தீரமான அரசு அமைந்த பின்னர் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும். அதற்காக குழுவொன்று அமைக்கப்படும்.

சபாநாயகர் உட்பட இந்த ஜனநாயகவிரோத நிலையயற்கட்டளைகளை அப்பட்டமாகமீறும் வகையிலான செயற்பட்ட அனைத்து அதிகாரிகளும் பொறுப்புகூறவேண்டிவரும் என்றார்.
Previous Post Next Post