தேர்தலில் ஐ.தே.கவில் இணைந்து போட்டி! -மேர்வின் அறிவிப்பு- - Yarl Thinakkural

தேர்தலில் ஐ.தே.கவில் இணைந்து போட்டி! -மேர்வின் அறிவிப்பு-

பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட விரும்புவதாக முன்னாள் அமைச்சரும், மக்கள் சேவைக் கட்சியின் தலைவருமான மேர்வின் சில்வா தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ரணில் விக்கிரமசிங்க சிறந்த தலைவர். தூரநோக்குடன் செயற்படும் அரசியல்வாதி. எனவே, அவர் தலைமையில் செயற்படுவதற்கு விரும்புகின்றேன். ஐக்கிய தேசியக்கட்சி வாய்ப்பளிக்குமானால் அடுத்த பொதுத்தேர்தலில் எந்தவொரு தொகுதியிலும் போட்டியிடுவதற்கு தயாராகவே இருக்கின்றேன்” என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பியாக அமைச்சராக இருந்த மேர்வின் சில்வாவுக்கு கடந்தமுறை போட்டியிடுவதற்கு ஐ.ம.சு.முன்னணி வேட்புமனு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஐ.தே.கவும் வழங்காது என்றே அக்கட்சிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
Previous Post Next Post