யார் பிரதமர்? மைத்திரி இன்று விசேட அறிவிப்பு! - Yarl Thinakkural

யார் பிரதமர்? மைத்திரி இன்று விசேட அறிவிப்பு!

நாட்டில் தற்போது அரசியல் நெருக்கடி உச்சம் தொட்டுள்ள நிலையில் நீதிமன்ற தீர்ப்பின் பின்னரான அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் என்னவென்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

நாட்டுக்கான தீர்மானம் என்ற தொனிப்பொருளின்கீழ் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மாநாடு இன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. அங்கு கட்சித் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி சிறப்புரையாற்றவுள்ளார்.

இதன்போதே அரசியல் குழப்பம் தொடர்பிலும் அவர் முக்கியத்துவமிக்க அறிவிப்பை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, குறித்த மாநாட்டில் பங்கேற்குமாறு சு.கவின் அனைத்து மட்டத்திலான அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. 10 இற்கும் மேற்பட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ளன. கட்சி மறுசீரமைப்பு சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்படவுள்ளது என நிகழ்வு ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
Previous Post Next Post