சு.க. மாநாட்டை புறக்கணிக்கிறார் சந்திரிக்கா! - Yarl Thinakkural

சு.க. மாநாட்டை புறக்கணிக்கிறார் சந்திரிக்கா!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மதியம் நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிறப்பு மாநாட்டில் அக்கட்சியின் சிரேஷ்ட ஆலோசகரான சந்திரிக்கா அம்மையார் பங்ககேற்கமாட்டார் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றது.


அரசமைப்புக்கு முரணாகவும், ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் மைத்திரிபால சிறிசேன செயற்படுவதாலும், மஹிந்தவுடன் நெருக்கமான உறவை பேணுவதாலும் சந்திரிக்கா கடும் சீற்றத்தில் உள்ளார்.  தனது ஆசியுடன் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, தன்னிச்சையாக செயற்படுவது கவலையளிப்பதாக சந்திரிக்கா  தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்.

இதன்காரணமாகவே அவர் மாநாட்டை புறக்கணிக்ககூடும் என தெரியவருகின்றது. எனினும், சந்திரிக்கா அம்மையாரின் தந்தையால் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரக்கட்சி இன்று மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கட்சியை மீள கட்டியெழுப்ப முன்வருமாறு அவரிடம் – சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, கட்சியின் நலன்கருதி அவர் மாநாட்டில் பங்கேற்ககூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Previous Post Next Post