புதிய வருடத்தில் தீர்வு! -பிராத்தணை செய்கிறாராம் சம்பந்தன்- - Yarl Thinakkural

புதிய வருடத்தில் தீர்வு! -பிராத்தணை செய்கிறாராம் சம்பந்தன்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியினை இன்று திங்கட்கிழமை காலை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே புதிய வருடத்தில் அரசியல் தீர்வினை பெற்றுக் கொள்ள தான் பிராத்திப்பதாக தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பிவைத்துளள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

ஒரு புதிய வருடத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் இத்தருணத்தில் இவ்வருடமானது இந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பினையும் கொண்டு வருகிற ஆண்டாக அமைய நான்பிரார்த்தனை செய்கிறேன்.

கடந்த வருடமாவது சாதகமான பாதகமான நிகழ்வுகளினூடாக பல்வேறு படிப்பினைகளை எமக்கு கொடுத்துள்ளது. இந்த படிப்பினைகளை எமது வாழ்வினை வளப்படுத்திக்கொள்ளவதற்கு பயனாக்கிக் கொள்ளும் அதேவேளை மற்றவர்களின் வாழ்விலும் நன்மையை கொண்டு வருமுகமாகவும் பயன்படுத்திக் கொள்வோமாக.

சமூகங்களிடையே பிரிவினையை கொண்டுவரும் பாதக காரணிகளுக்கு நாம் அகப்பட்டு போகாமல் அதேவேளை, சமூகங்களை இன மத அடிப்படையில் பிரிக்கும் குறுகிய அரசியல் எண்ணம் கொண்ட பிரிவினைவாதிகளுக்கெதிராகவும் செயற்பட இந்த புதிய வருடத்தில் திடசங்கற்பம் கொள்வோமாக.

மேலும் பாதிக்கப்பட்ட சமூகங்கள் தமது நீண்டகால பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் இந்த புதிய வருடத்தில் அடைந்திட வேண்டும் என நான் பிரார்த்தனை செய்கிறேன் நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் பிரிக்க முடியாத பிளவுபடாத ஒருமித்த நாட்டிற்குள் தேசிய பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை அடைந்திட முன்வருமாறு அரசியல் தலைவர்கள், சமய தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் ஆகியோரை அழைத்து நிற்கிறேன் என்றுள்ளது.

Previous Post Next Post