யாழ் விவசாயிகளுக்கு உதவிதிட்டம் -அங்கஜன் வழங்கி வைத்தார்- - Yarl Thinakkural

யாழ் விவசாயிகளுக்கு உதவிதிட்டம் -அங்கஜன் வழங்கி வைத்தார்-

வடக்கின் துரித விவசாய மீள் எழுச்சி செயற்திட்டத்தின் கீழ் உரும்பிராய் கமநல சேவை திணைக்களத்தில் கமத்தொழிலமைச்சர் அங்கஜன் இராமநாதன் பங்கேற்பில் “கவென்டிஷ் வாழை” விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் “டோல் லங்கா” நிறுவனத்தினர் ஒப்பந்த அடிப்படையில் மீள் கொள்வனவு செய்ய வழிவகுத்து
உரும்பிராய் பிரதேசத்தை “வாழை ஏற்றுமதி உற்பத்தி அபிவிருத்தி வலயம்” பிரகடனம் செய்யப்படுள்ளது.

இதுமட்டுமல்லாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும்
முகமாக விவசாய கிணறுகள் திருத்தம் செய்வதற்கும், வெங்காய கொட்டில்கள் அமைப்பதற்கான காசோலைகளையும் வீட்டுத் தோட்ட செய்கைக்கான உபகரணங்கள்
மற்றும் விதைகளையும் விவசாய பிரதி அமைச்சர் வழங்கி வைத்தார்.
Previous Post Next Post