சிவன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் -அறநெறி கல்வி தொடர்பில் கலந்துரையாடல்- - Yarl Thinakkural

சிவன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் -அறநெறி கல்வி தொடர்பில் கலந்துரையாடல்-

சிவன் அறக்கட்டளை ஆலோசனைக்குழுவின் அறநெறித்துறையினரின் கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றிருந்தது.

இக்கலந்துரையாடலில் அறநெறிகல்விக்கு பிள்ளைகளை அனுப்பவேண்டியதன் முக்கியத்துவம் பற்றி ஆராயப்பட்டது.

பிள்ளைகளுக்கு அறநெறி கல்வி என்றால் என்ன அதை நாம் ஏன் கற்க வேண்டும் என்ற விபரத்தினை பெற்றோர்கள் ஆசிரியர்கள் கல்விசார் சமூகங்கள் பாடசாலைகள் தெரியப்படுத்துவதுடன் மாணவர்களை அதன் வழியில் கொண்டு செல்வதற்கு உறுதுணையாகவும் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மாணவர்கள் மத்தியில் அறநெறி தொடர்பான ஓர் ஊக்கப்படுத்தலை வழங்க வேண்டும். அவர்கள் அறநெறி கற்கைகளில் பெறுகின்ற அடைவுமட்டத்தினை பாடசாலைகளில் மாணவர் கோப்புடன் இணைத்து வைத்திருப்பதுடன் உயர்கல்வியின் போது அதற்கென தனிமதிப்பெண் வழங்கக்கூடிய அடிப்படையினை கல்வி பணிப்பகம் ஏற்படுத்த வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டது.

அத்துடன் அறநெறி வகுப்புக்களில் நடைபெறும் பரீட்சை பெறுபேற்று புள்ளிகளை புலமைப்பரிசில் பரீட்சை புள்ளிகளுடன் இணைப்பதற்கான ஒரு திட்டத்தினை கொண்டவருவது தொடர்பில் கல்வி செயலாளருடன் ஆலோசிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆரம்பகல்வியிலிருந்தே மாணவர்களை அறநெறியில் இணைத்துக்கொள்ள வாய்பாக இருக்கும் என கருதப்பட்டது.
இவை தொடர்பான முன்மொழிவு ஒன்றினை ஓய்வுபெற்ற புற்றளை மகாவித்தியாலய அதிபர்.திரு.சிவநாதன் அவர்கள் தயாரித்து வழங்கவுள்ளார். அதனை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் சிவன் அறக்கட்டளை இயக்குனர் கணேஸ்வரன் வேலாயுதம் பேராசிரியர்களான ஏ.சண்முகதாஸ் மற்றும் னுசச.மனோன்மணி வைத்தியகலாநிதி.ஜெயக்குமார், ஓய்வுபெற்ற அதிபர் திரு.சிவநாதன், ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பு சறோஜா, போதகர். டேவிட் அழகராஜா, திரு.சிறிகரன் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களான திருமதி.சி.சிவகௌரி, திருமதி.க.வசந்தகுமாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
Previous Post Next Post