ஓரிரு நாட்களில் ஜனாதிபதி தீர்மானம் எடுப்பார்! -சம்பந்தன் உறுதி- - Yarl Thinakkural

ஓரிரு நாட்களில் ஜனாதிபதி தீர்மானம் எடுப்பார்! -சம்பந்தன் உறுதி-

நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பது தொடர்பில் இன்னும் இரண்டொரு தினங்களில் ஜனாதிபதி முக்கிய தீர்மானம் ஒன்றை எடுப்பார்.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
Previous Post Next Post