8 மாத குழந்தை கிணற்றில் வீசி கொலை! - Yarl Thinakkural

8 மாத குழந்தை கிணற்றில் வீசி கொலை!

புளியம்குளம், உஞ்சல்கட்டு பிரதேசத்தில் எட்டு மாத கைக்குழந்தை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு வௌியே சென்ற தாய் மீண்டும் வீடு திரும்பியபோது குழந்தை இருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றில் குழந்தை இருப்பதைக் கண்ட தாய் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் குழந்தையை எடுத்து வைத்தியசாலையில் சேர்த்தபோதும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளது என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் இருந்த தாயின் மாமியாரால் குழந்தை கிணற்றில் வீசப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான பெண் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Previous Post Next Post