கஞ்சாவுடன் சிவனொளிபாதமலை ஏறச்சென்ற 7 ஆசாமிகள் கைது! - Yarl Thinakkural

 கஞ்சாவுடன் சிவனொளிபாதமலை ஏறச்சென்ற 7 ஆசாமிகள் கைது!

கஞ்சா பக்கட்டுகளுடன், சிவனொளிபாதமலை ஏறச்சென்ற ஏழு  இளைஞர்கள் நேற்று (25) ஹட்டன் பொலிஸாரால் கைது கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர்,  ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில்  வாகனங்களை சோதனை  செய்த போதே இவர்கள் சிக்கியுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறை, கொழும்பு, உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிவனொளிபாதமலைக்கு போதை வஸ்த்துக்களை கொண்டு செல்வதனை தடுப்பதற்காக ஹட்டன் பொலிஸாரால் விசேட சோதனை நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது.
Previous Post Next Post