வடக்கு வெள்ளத்தில் 72 ஆயிரம் பேர் பாதிப்பு! - Yarl Thinakkural

வடக்கு வெள்ளத்தில் 72 ஆயிரம் பேர் பாதிப்பு!

வடக்கு மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இடர் முகாமைத்துவ நிலையம் இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த வெள்ளத்தினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களோ மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில், 11,688 குடும்பங்களைச் சேர்ந்த , 38,534 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில், 6,520 குடும்பங்களைச் சேர்ந்த 20,737 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில், 4257 குடும்பங்களைச் சேர்ந்த 12,642 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 455 பேரும், மன்னார் மாவட்டத்தில் 85 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் மொத்தமாக, 22,624 குடும்பங்களைச் சேர்ந்த, 72,453 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், நேற்று நண்பகல் நிலவரங்களின்படி, 35 நலன்புரி நிலையங்களில் 10,342 பேர் தங்கியிருப்பதாகவும், இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
Previous Post Next Post