யாழில் 31 கிலோ கஞ்சா வாகனத்துடன் மீட்பு! - Yarl Thinakkural

யாழில் 31 கிலோ கஞ்சா வாகனத்துடன் மீட்பு!

வாகனம் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட 31 கிலோ கஞ்சாவை மீட்டதுடன், சந்தேகநபர் ஒருவரையும் சிறப்பு அதிரடிப்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் வாகனம் ஒன்றில் போதைப் பொருள் கடத்தல் இடம்பெறுவதாக சிறப்பு அதிரடிப் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

விரைந்து செயற்பட்ட அதிரடிப்படையினர் சந்தேகத்துக்கு இடமாக இன்று அதிகாலை 2 மணிக்கு பயணித்த வாகனம் ஒன்றை மறித்துச் சோதனையிட்டனர்.

வாகனத்தில் சுமார் 31 கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

கஞ்சாவைக் கைப்பற்றியதுடன், வானில் பயணித்த நபரையும் கைது செய்தனர்.
Previous Post Next Post