கள்ளக் காதலுக்காக 3 வயது குழந்தையை கொடூரமாக கொலைசெய்த தாய்! - Yarl Thinakkural

கள்ளக் காதலுக்காக 3 வயது குழந்தையை கொடூரமாக கொலைசெய்த தாய்!

காதலனை கரம்பிடிக்க இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் கரூர் மாவட்டம் குளித்தலையில் அரங்கேறியுள்ளது.


தமிழகத்தின் கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த பரளி என்ற கிராமத்தில் உள்ள ரம்யாவுக்கும் திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த கொலைக்குடியை சேர்ந்த தங்கதுரை என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் நடந்த மூன்றாம் மாதமே ரம்யா தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்படி இருந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

தற்போது குழந்தைக்கு மூன்று வயது இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் பதறிய அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடி வீட்டிற்குள் சென்று பார்க்கையில் குழந்தை கழுத்தை நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. அதேபோல் ரம்யாவும் தற்கொலைக்கும் முயன்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்த குளித்தலை போலீசார் அவரை கைப்பற்றினர்.

இப்படி தாய் வீட்டிற்கு வந்த நிலையில், அவருக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் பழைய காதலனை சந்தித்த ரம்யா அவரை திருமணம் செய்துகொள்ள திட்டமிட மூன்று வயது பெண் குழந்தை இடையூறாக இருப்பதாக பழைய காதலன் மணிமாறன் தெரிவிக்க அவனின் ஆலோசனைப்படி குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றுள்ளாள் ரம்யா. குழந்தையை கொன்ற பின் எங்கே மாட்டிக்கொள்ளவோமோ என பதறிய ரம்யா தானும் இறந்துவிடலாம் என தற்கொலைக்கு முடிவெடுத்துள்ளார்.
Previous Post Next Post