மனிதப் புதைகுழியில் வெளிவரும் மர்மம்! -21 சிறுவர்களின் எலும்புக் கூடுகள் மீட்பு- - Yarl Thinakkural

மனிதப் புதைகுழியில் வெளிவரும் மர்மம்! -21 சிறுவர்களின் எலும்புக் கூடுகள் மீட்பு-

மன்னார் மனித புதை குழியிலிருந்து இது வரை 21 சிறுவர்களுடைய மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அகழ்வுப் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

இந்தப் புதை குழியில் இருந்து இதுவரை 276 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை கடந்த வாரம் அகழ்வு பணிகளில் சுமார் 2 மீற்றர் அளவில் சந்தேகத்திற்கு இடமான மனித எலும்பு மீட்கப்பட்டுள்ளது.

இது வரை அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 21 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post