கொக்குவில் கடைக்குள் புகுந்து அட்டகாசம் 2 பேருக்கு 6 மாதங்கள் சிறை -4 பேருக்கு திறந்த பிடியாணை- - Yarl Thinakkural

கொக்குவில் கடைக்குள் புகுந்து அட்டகாசம் 2 பேருக்கு 6 மாதங்கள் சிறை -4 பேருக்கு திறந்த பிடியாணை-

கொக்குவில் பகுதியில் உள்ள வர்ணப்பூச்சு மற்றும் இருப்புக் கடை ஒன்றுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களைத் தாக்கி பொருட்களையும் அடித்து, உடைத்துச் சேதப்படுத்திய ஆவாக் குழுவைச் சேர்ந்தவர்களென பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட சமூக விரோதிகள் இருவருக்கு 6 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று இந்தத் தண்டனையை வழங்கி உத்தரவிட்டார்.
கொக்குவில் சந்திக்கு அருகாடையில் உள்ள இருப்பகத்துக்குள் கடந்த மாhர்ச் மாதம் 9 ஆம் திகதி புகுந்த ஆவா என அடையாளப்படுத்தப்பட்ட சமூகவிரோதக் கும்பலொன்றைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்தவர்களைத் தாக்கி, பொருட்களையும் அடித்து உடைத்தனர்.
இந்தத் தாக்குதல் காட்சிகள், மற்றும் தாக்குதலாளிகள் கடையில் இருந்த கண்காணிப்பு கமெர மூலம் அடையாளம் காணப்பட்டனர்.

தாக்குதலையடுத்து 4 பேர் கைது செய்யப்பட்டனர். பொலிஸாரால் தேடப்பட்ட ஒருவர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் சரணடைந்தார். அதன் பின்னர் மேலும் நான்கு பெர் என மொத்தம் 9 பேர் இத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.

இந்த 9 பேருக்கும் எதிராக பொலிஸார் நேற்று நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்தனர்.

எனினும் இவர்களில் நால்வர் மட்டுமே நேற்று நீதிமன்றில் முன்னிலையாகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை வாசித்துக் காண்பிக்கப்பட்டது.

இவர்களில் இருவர் தாம் குற்றவாளிகள் என ஏற்றுக்கொண்டனர். ஏனைய இருவரும் தம்மீதான குற்ற்ச்சாட்டுக்களை நிராகரித்தனர். தாம் நிரபராதிகள் எனத் தெரவித்தனர்.

இதனையடுத்து குற்றத்தை ஏற்றுக்கொண்ட இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிவான் உத்தரவிட்டார். இருவருக்கும் தலா 3000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டது. 

இந்நிலையில் அடையாளப்படுத்தப்பட்ட ஒன்பது போரில் தண்டனை விதிக்கப்பட்ட இருவர் தவிர்ந்த எனைய ஏழு சந்தேக நபர்களில் ஒருவர் விடுவிக்கப்பட்டார்.
மீதமுள்ள குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களைக் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார்.
Previous Post Next Post