தேர்தலே ஒரே தீர்வு -நாமல் ராஜபக்‌ஷ- - Yarl Thinakkural

தேர்தலே ஒரே தீர்வு -நாமல் ராஜபக்‌ஷ-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரது ஒரே நோக்கம் பொதுத்தேர்தலை நடத்துவது மாத்திரமென  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஷபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நாமல் இதனை கூறியுள்ளார்.

மேலும் நாட்டில் எழுந்துள்ள அரசியல் பிரச்சினைகள் அனைத்துக்கும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஒருவரே காரணமாகும்.

அவர், நிகழ்ச்சி நிரலில் ஒன்றினை கூறிவிட்டு பின்னர் அதற்கு முரணான வகையில் நிலையியற் கட்டளைச் சட்டத்தையும் மதிக்காமல் செயற்படுகின்றார்.

இவ்வாறு ஒவ்வொரு தரப்பினரும் வௌ;வேறு விதமாக செயற்பட்டால் நாட்டில் நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது. ஆகையால் தற்போதைய பிரச்சினைக்கு தேர்தல் ஒன்றே தீர்வாகும்.

இதனால் தான் பிரதமரும் ஜனாதிபதியும் நாட்டில் தேர்தல் ஒன்றினை நடத்துவதனை மாத்திரம் நோக்காக கொண்டு செயற்படுகின்றனர் என நாமல் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post