யாழ்.பல்கலையில் மாவீரர் தின ஏற்பாடுகள் - Yarl Thinakkural

யாழ்.பல்கலையில் மாவீரர் தின ஏற்பாடுகள்

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் வழமை போன்று இவ்வருடமும் தமிழின விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தும் மாவீரர் நாiளை உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் அகவணக்கம் செலுத்தப்படும் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள மாவீரர் நினைவு தூபி புணரமைப்புச் செய்யப்படுகின்றது. மாவீரர் நினைவுத்தூபியைச் சுற்றி வளைவுச்சுவர்கள் அமைப்பதும், அதன் நிலப்பகுதியில் புல்கத்தைகள் வைக்கப்பட்டும், நினைவுத்தூபி வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு மாவீரர் நினைவு தூபியினை சூழ உள்ள பகுதிகளின் புணரமைப்பு வேலைகள் முடிவடைந்த பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினரால் மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்ரிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

Previous Post Next Post