யாழ் பல்கலையில் மாவீரன் நினைவேந்தல் ஏற்பாடுகள் - Yarl Thinakkural

யாழ் பல்கலையில் மாவீரன் நினைவேந்தல் ஏற்பாடுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் நினைவேந்தல் நினைவுகளுக்காக பல்கலைக்கழகத்திலுள்ள மாவீரர் நினைவுத் தூபி புனரமைக்கப்பட்டு மாவீரர் நாள் நிகழ்வுகளும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஏறங்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாவீரர் நாள் நாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதற்காக மாவீரர் துயிலும் இல்லங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்ற அதே வேளையில் பல்வேறு நிழக்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இதே போன்ற மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் தயாராகிக் கொண்டிருக்கின்றது. பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவுத் தூபி மீளப் புனரமைக்கப்பட்டு புதுப் பொழிவுடன் காட்சியளிக்கின்றது.

இதற்கமைய பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர் நினைவுத் தூபியையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் மஞ்சல் சிவப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டு நினைவு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

அத்தோடு மாவீரர் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு நாளைமதியம் பல்கலைக்கழகத்தில் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை மாலை மாவீரர் நினைவேந்தல் நிகழ:வுகளும் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post