இராணுவம் - பொலிஸ் கண்காணிப்பில் கோப்பாயில் மாவீரர் தினம் - Yarl Thinakkural

இராணுவம் - பொலிஸ் கண்காணிப்பில் கோப்பாயில் மாவீரர் தினம்

தமிழீழ மாவீரர் நாளை ஒட்டி கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல சூழலில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் தமிழீழ மாவீரர் நாள் வட கிழக்கு மாகாணங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக ளை தடுப்பதற்கு பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் கடுமையான

முயற்சிகளை மேற்கொண்டபோதும் அவை பெரியளவில் வெற்றியளிக்காத நிலையில் நினைவேந்தலை தடுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து இடம்பெறுகிறது.

இந்நிலையில் இன்று காலை கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாவீரர்களுக்கு

அஞ்சலி செலுத்தினார். இதன்போது அப்பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், புலனாய்வாளர்கள், பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post