பௌசியும் ‘பல்டி’ மஹிந்தவுடன் சங்கமம்! - Yarl Thinakkural

பௌசியும் ‘பல்டி’ மஹிந்தவுடன் சங்கமம்!

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப்போவதாக அறிவித்து, சுயாதீனமாக செயற்பட முடிவெடுத்திருந்த பௌசி , மீண்டும் மஹிந்தவுடன் சங்கமிக்க முடிவெடுத்துள்ளார்.


இதற்காக அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியை அவர் பேரமாக முன்வைத்துள்ளார். இதற்கு மைத்திரி தரப்பில் பச்சைக்கொடி காட்டப்பட்டதையடுத்தே ‘பல்டி’க்கு அவர் தயாராகியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அழிக்கும் முயற்சியில் மஹிந்த செயற்படுகிறார். அதற்கு மைத்திரியும் துணைபோகிறார் என குறிப்பிட்டு, அதற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் ரணிலுடன் கைகோர்த்த பௌசியும், பியசேன கமகேயும், சு.கவின் சுயாதீன உறுப்பினர்களாக செயற்படவுள்ளதாக அறிவித்தனர்.

இந்நிலையிலேயே, பௌலி மனம்மாறி, மஹிந்தவுடன் கரம்கோர்க்கவுள்ளார். நாளை நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி வரிசையில் அவர் அமரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous Post Next Post