-மஹிந்தவுக்கு கடும் உத்தரவிட்ட மைத்திரி- - Yarl Thinakkural

-மஹிந்தவுக்கு கடும் உத்தரவிட்ட மைத்திரி-

நாட்டின் நிதியமைச்சில் முக்கிய பதவி வகித்த ஒருவரின் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின்பேரில் பறிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கிய உத்தரவுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்களால் சிக்கிய எந்த ஒருவருக்கும் அரச நிறுவனங்களில் பதவிகளை வழங்க வேண்டாமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் பிரதமர் மஹிந்தவுக்கு கடும் உத்தரவை பிறப்பித்தார்.

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைமைப் பதவிக்கு மஹிந்த ராஜபக்ச தரப்பால் பரிந்துரை செய்யப்பட்ட ஒருவரின் பெயரை நிராகரித்து இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக தகவல் கிடைத்தது.

குறித்த நபர்மீது பல குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் அவரை அந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி கூறியதையடுத்து நிதியமைச்சிலும் மேற்படி முக்கியஸ்தருக்கு வழங்கப்பட்டிருந்த முக்கிய பதவி ஒன்றை மீளப்பெறுமாறு மஹிந்த நேற்று உத்தரவிட்டுள்ளதாக அந்த தகவல் கூறுகின்றது.

Previous Post Next Post