தலைவரின் பிறந்தநாள் ஏற்பாடுகள் -சிவாஜிலிங்கம் கைது- - Yarl Thinakkural

தலைவரின் பிறந்தநாள் ஏற்பாடுகள் -சிவாஜிலிங்கம் கைது-

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ் வினை கொண்டாட முயற்சித்தமைக்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்த பொருட்கள் பறிக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்

இன்றைய தினம் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரனின் 64வது பிறந்த தினம் இன்றைய தினம் பல இடங்களில் கொண்டாடப்படுகின் றது. இந்நிலையில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சி வாஜிலிங்கம் தலமையில் இன்றைய தினம் காலை,

வல்வெட்டித்துறையில் உள்ள தலைவரின் வீட்டில் ஒழுங்கமைக்கப்ப ட்டிருந்த நிலையில் அங்குவந்த பொலிஸார் சிலருடைய அடையாள அட்டைகளை பறித்துக் கொண்டு விசார ணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். 

இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக  முன்னாள் மாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் பிரபாகரனின் வீட்டுக்கு சென்றபோது சிவாஜிலிங்கமும் கைது செய்யப்பட்டாh்.  பின்னா் அவரிடமிருந்த கேக் உள்ளிட்ட பிறந்தநாள்

கொண்டாட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த பொலிஸார் மேல் நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்  கொள்ளப்படும் என கூறியுள்ள பொலிஸார் சிவாஜிலிங்கத்தை வெளியில் விட்டுள்ளனா்.

Previous Post Next Post