பொலிஸாரை சுட்டது நானா? ஐ.தே.க. கட்டுக்கதை விடுகிறது! - Yarl Thinakkural

பொலிஸாரை சுட்டது நானா? ஐ.தே.க. கட்டுக்கதை விடுகிறது!

மட்டக்களப்பில் பொலிஸார் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவத்துக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவத்துடன் கருணா அம்மானுக்கு தொடர்பிருக்கலாம்.

இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் சட்டம், ஒழுங்கு பிரதியமைச்சரான நளின் பண்டார இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இக்கூற்றை கருணா அம்மான் நிராகரித்துள்ளார்.

டுவிட்டர் பக்கத்தில் வெளியான தகவலொன்றை மேற்கோள்காட்டியே எனக்கு எதிராக குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் முன்வைத்துள்ளார். அந்த டுவிட்டர் கணக்கு என்னுடையது அல்ல. எவ்வித ஆராய்வும்இன்றி வேண்டுமென்றே என்மீது பழிசுமத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார் கருணா அம்மான்.
Previous Post Next Post