பல்கலைக்கழக சமூகம் ஒன்றிணைந்து மாவீரர்களுக்கு அஞ்சலி - Yarl Thinakkural

பல்கலைக்கழக சமூகம் ஒன்றிணைந்து மாவீரர்களுக்கு அஞ்சலி

தமிழின விடுதலைப் போராட்டத்திற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகமே ஒன்றிணைந்து உணர்வு புர்வமாக அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள புணரமைக்கப்பட்ட மாவீரர் நினைவு தூபியில் மலர்களை தூவியும், தொட்டு வணக்கத்தை செலுத்தியும் பல்கலைக்கழக சமூகத்தினர் தமது மனமார்ந்த அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.

இதன் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களும் ஒலிக்கவிடப்பட்டிருந்தமை அஞ்சலி நிகழ்வினை மேலும் உணர்வு பூர்வமாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post