தலைவரின் பிறந்தநாள் -வல்வெட்டித்துறையில் பொலிஸ் குவிப்பு- - Yarl Thinakkural

தலைவரின் பிறந்தநாள் -வல்வெட்டித்துறையில் பொலிஸ் குவிப்பு-

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த இடமான வல்வெட்டித்துறையிலுள்ள இல்லத்தில் அவருடைய பிறந்த நாள் நிகழ்வைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்தவர்களை பொலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலைவர் பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இப் பிறந்த நாளை முன்னிட்டு வல்வெட்டித் துறையிலுள்ள அவரது இல்லத்திலும் பிறந்த நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக அவரது காணி மற்றுமு; வீடு துப்பரவுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அங்கு துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் அடையாள அட்டைகளைப் பறித்துக் கொண்டு அவர்களையும் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வருமாறும் அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அத்தோடு அங்கு பொலிஸாரும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருக்கின்றமையால் பதற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post