எத்தடை வரினும் மாவீரர் தினம் நடக்கும் -சிவாஜிலிங்கம்- - Yarl Thinakkural

எத்தடை வரினும் மாவீரர் தினம் நடக்கும் -சிவாஜிலிங்கம்-

எந்த தடைகள் வரினும் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுடன் நடைபெறும் என்று தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், உயிரிழந்தவர்களை நினைவுகூற அடை விதிப்பதற்கு எந்த கட்டளை சட்டங்களும் பிரயோகிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் மாவீரர் நாள்நிகழ்விற்கு பொலிஸார் தடை உத்தரவு கோரி நீதிமன்றில் வழங்குத் தாக்கல் செய்திருக்கின்றமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு சிவாஐpலிங்கம் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் தாய்த் தமிழகத்திலும் பல இடங்களிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக நடைபெற்று வருகின்றன. மாவீரர் தின ஒழுங்குமுறை என்பது தாயகத்திலும் பல்வேறு நாடுகளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

தாயகத்திலும் மாவிரர் தயிலுமில்லங்களில் அந்த மாவீரர் தின நிகழ்வுகள் உறவுகள் போராளிகளால் ஒழுகங்கமைப்பகப்பட்டள்ளது. இங்கு இருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் இடித்தழிக்கப்பட்டு, அதில் இராணுவ முகாங்களை அமைத்து படையினர் நிலை கொண்டுள்ளனர்.
இந் நிலையில் அதற்கு முன்பாகவும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. இதேபோன்று கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லமும் இடித்தழிக்கப்பட்டு அங்கு இரானுவ முகாம் அமைக்கப்பட்டு இரானுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.

இந்நிலையிலையிலையே அந்த துயிலும் இல்லம் முன்பாக மாவீரர் நாள் நிகழ்வை நடாத்துவதற்கு எதிராக தடை உத்தரவு கோரி கோப்பாய் பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

அந்தத் தடை உத்தரவு வெறுமனே ஒரு சில கோரிக்கைகளை அல்லது அவர்கள் சில வெற்றிகளை அடைகய முடியுமே தவிர மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நினைவு கூருவதை தடுப்பதாக அமையாது.
உயிரிழந்த உறவுகளை மக்கள் நினைவு கூருகின்ற மக்கள் மனங்களுக்கு தடை செய்ய முடியாது என்பதையும் ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்த வருடங்களிலும் மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு தமது உறவுகளை நினைவு கூர்ந்திருந்தனர்.

அதனைப் போன்று இந்தாண்டும் நினைவு கூர்வதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்துள்ளனர். ஆகையினால் எந்தவிதமான அடக்குமுறைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் துடைத்தெறிந்து மக்கள் பல்லாயிரக்கணக்கிலே அனுஸ்டிப்பார்களாக இருந்தால் எந்த அரசும் மக்களின் உணர்வகளுக்கு தடைகளை போட முடியாது என்பதை அகில உலகிற்கு எங்களால் காட்ட முடியம்.

ஆகவே எல்லோரும் தங்கள் மங்களிலிலே உள்ள அச்சங்கள் பயங்களை தடைகளை நீக்கி பல்லாயிரக்கணக்கிலே திரண்டு நினைவுகூர முன்வர வேண்டும். குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணி என அழைக்கப்படும் Nஐவிபியினர் படையினரால் கொல்லப்பட்டதை நினைவுகூர முடியுமென்றால் ஏன் நாங்கள் வடகிழக்கி தாயகத்திலே மாவிரார்களை நினைவு கூற முடியாது என்றால் அதற்கு யாரும் பதில் கூற முடியாது. அவர்களுக்கு ஒரு நீதி எங்களக்கு ஒரு நீதியாக இருக்க முடியாது.

உலகத்திலே இறந்தவர்களை நினைவுகூர தடை செய்ய எந்த கட்டளைச் சட்டங்களையும் பிரயோகிக்க முடியாது என்பதை எங்கள் மக்கள் தங்கள் உணர்வுகள் மூலம் எடுத்தக் காட்ட வேண்டும் என்றார்.

Previous Post Next Post