பஸ் மீது கல்வீச்சு -கொடிகாமத்தில் சம்பவம்- - Yarl Thinakkural

பஸ் மீது கல்வீச்சு -கொடிகாமத்தில் சம்பவம்-

இலங்கை போக்கு வரத்து சபையின் பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல், ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த சம்பவம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட எழுதுமட்டுவாள்ப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்கு வரத்து சபையின் பேருந்து மீதே எழுதுமட்டுவாள்ப் பகுதியில் வைத்து இன்று இரவு 8.45 மணி சரமாரியான கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post