அரசியல் நெருக்கடிக்கு உடன் தீர்வு காணுங்கள்! -மைத்திரியிடம் ஐ.நாவின் அதிகாரி வலியுறுத்து- - Yarl Thinakkural

அரசியல் நெருக்கடிக்கு உடன் தீர்வு காணுங்கள்! -மைத்திரியிடம் ஐ.நாவின் அதிகாரி வலியுறுத்து-

கொழும்பு வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் மரி யமஷிட்டா இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தணிக்கத் தாமதமின்றி முயற்சிகளை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அந்த முயற்சிகளுக்கு சர்வதேச சமூகம் முழு ஆதரவை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

அரசமைப்பின் பிரகாரம் உரிய விடயங்களைக் கையாண்டு இதற்கு முடிவைக் காணவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post