பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் சி.வியின் புதிய கட்சி - Yarl Thinakkural

பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் சி.வியின் புதிய கட்சி

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சியான தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சி முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்பட்டுவந்த முரண்பாடுகளின் பின்னர், அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.யை களமிறக்கப் போவதில்லையென கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வடக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் நிறைவடைந்தபின்னர் சி.வி. தனது புதிய கட்சியை ஆரம்பித்தார்.

புதிய கட்சியின் மூலம் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவாரென தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கிடையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. அதன்பிரகாரம் பாராளுமன்றத் தேர்தலை குறிவைத்து சி.வி.யின் கட்சி செயற்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post