அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை - Yarl Thinakkural

அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை

வழக்கு தாக்கலுக்கு உட்படாத சிறைச்சாலைகளிலுள்ள தமிழ்க் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இவர்களது விடுதலை குறித்து அமைச்சரவைக்கு அறிவித்திருப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் றோகண லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.

இதேபோன்று தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பில் அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனவரி மாதத்தில் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பில் கேட்டபோது. ஜனவரி மாதத்திற்கு முன்னதாகவே கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டர்.

Previous Post Next Post