யாழில் சடலம் மீட்பு - Yarl Thinakkural

யாழில் சடலம் மீட்பு

யாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

யாழ். கொய்யாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய விமலதாஸ் ஜோசப் ஜெபர்சன் என்பவரே இவ்வாறு சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து சடலமாக பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

கடற்றொழில் செய்யும் இவர், இந்த வீட்டிற்கு சென்று அங்கு உறங்கிய உள்ள நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அந்த பகுதிக்குச் சென்ற நபர்கள் இவர் சடலமாக கிடப்பதைக் கண்டு யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளதுடன், சடலம் தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர். 
Previous Post Next Post