காதல் பிரச்சினை மாணவன் வெட்டிப் படுகொலை! - Yarl Thinakkural

காதல் பிரச்சினை மாணவன் வெட்டிப் படுகொலை!

மாத்தறை எலவெல்ல வீதியிலுள்ள தனியார் கற்கை நிறுவனமொன்றுக்கு அருகில் 19 வயதான மாணவன் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

காதல் பிரச்சினையால் தனியார் கற்கை நிறுவனமொன்றுக்கு அருகில் மாணவர்களிடையே நேற்றுச் சனிக்கிழமை ஏற்பட்ட மோதலின்போதே இந்த மாணவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மோதலில் பலத்த வெட்டுக்காயங்களுக்குள்ளான மாணவன் மாத்தறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் எனப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மாத்தறையிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 13இல் கல்வி கற்கும் ரசிது ஹிம்ஹான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மாத்தறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post