பொதுத்தேர்தலைகோரி கையெழுத்து வேட்டை - Yarl Thinakkural

பொதுத்தேர்தலைகோரி கையெழுத்து வேட்டை

நாட்டில் தற்போது எழுந்துள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வைக்காண்பதற்காக உடனடியாக பொது தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி ஹட்டனில் இன்று கையெழுத்துவேட்டை நடத்தப்பட்டது.


நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்புவதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கையொப்பம் திரட்டும் நிகழ்வில், அட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் எஸ்.பாலச்சந்திரன், உறுப்பினர்கள், பிரதேச மக்கள், சமூக அமைப்புகள் என பலரும் கலந்து கொண்டனர்.

பொதுத்தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி 10 இலட்சம் கையொப்பங்கள் அடங்கிய மகஜரொன்றை ஜனாதிபதியிடம் கையளிக்க மஹிந்த அணி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கை நேற்று கடவத்தையில் முன்னெடுக்கப்பட்டது.
Previous Post Next Post