-நாடின் அரசியல் மாற்றம்- மேதல்கள் ஆரம்பம் - Yarl Thinakkural

-நாடின் அரசியல் மாற்றம்- மேதல்கள் ஆரம்பம்

நாடாளுமன்றை கலைத்து வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றினால் வௌியிடப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவினை தொடர்ந்து சில பிரதேசங்களில் மோதல்கள் சில பதிவாகியுள்ளன.

மாவனெல்லை பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் அனுர சந்தன உள்ளிட்ட குழுவினர் நேற்றிரவு நீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து மாவனெல்லை நகரில் பட்டாசு கொளுத்தி தமது மகிழச்சியை வௌிப்படுத்தியிருந்தனர்.

பின்னர் , அங்கு அமைந்துள்ள 5 பழக்கடைகளுக்கு சிலரால் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாள் மற்றும் பொல்லுகளுடன் வந்த சிலர் இவ்வாறு கடைகளை சேதப்படுத்தியதாக அதன் ஊழியர்கள் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை , ஆனமடுவ நகரத்தில் இருக்குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஆனமடுவ பிரதேசத்தில் வைக்கப்பட்டிருந்த பதாதைகள் சில இனந்தெரியாத சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Previous Post Next Post