சபாநாயகரின் ஆசனத்தை கைப்பற்றிய மைத்திரி அணி - Yarl Thinakkural

சபாநாயகரின் ஆசனத்தை கைப்பற்றிய மைத்திரி அணி

பாராளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனத்தை ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அடாவடியாகப் பிடித்துள்ளது. இதனால் பாராளுமன்;றத்தை கொண்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

8 ஆவது பாராளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.

ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ சபாநாயகரின் ஆசனத்தை ஆக்கிரமித்து அதில் அமர்ந்துள்ளார்.

ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் அவரை பாதுகாக்கும் வகையில் சுற்றிவளைத்து நின்றதால் சபாநாயகர் தனது ஆசனத்தில் சென்று அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


Previous Post Next Post