எம்.பி ஜோசப் வழக்கு –பிள்ளையானின் மறியல் நீடிப்பு- - Yarl Thinakkural

எம்.பி ஜோசப் வழக்கு –பிள்ளையானின் மறியல் நீடிப்பு-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அவர் நேற்று விடுதலை செய்யப்படுவர் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நேற்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு முன்னால் பிள்ளையானின் கட்சி உயர்பீட உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் காத்திருந்தனர். இருப்பினும் அவரது விளக்கமறியலை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரையும் நீடித்து நீதிவான் உத்தரவிட்டார்.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைச் சம்பவத்தில், குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 11ஆம் திகதி பிள்ளையான் கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post